மண்டலக்கோட்டையை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரிக்கை

0பார்த்தது
மண்டலக்கோட்டையை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில், மண்டலக்கோட்டை கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். கீழக்குறிச்சி ஊராட்சியில் உள்ள மண்டலக்கோட்டை கிராமத்தில் 450-க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 1,200-க்கும் அதிகமான வாக்குகளும் உள்ளன. கிராம நிர்வாக அலுவலகத்திற்கு 4 கி.மீ. தூரம் செல்ல வேண்டியிருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும், புதிய ஊராட்சி அமையும் வரை வாரத்தில் மூன்று நாட்கள் கிராம நிர்வாக முகாம் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம கமிட்டி நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி