திமுக கூட்டணி தான் அடிமை கூட்டணி - தமிழிசை தாக்கு

4பார்த்தது
திமுக கூட்டணி தான் அடிமை கூட்டணி - தமிழிசை தாக்கு
பட்டுக்கோட்டையில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டினார். நிதி நிர்வாகம் மற்றும் கொள்கை அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றுதான் என்றும், முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசை குறை கூறி மாநில சுயாட்சியை கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். மத்தியில் ஆட்சி செய்தபோது மாநில சுயாட்சி ஸ்டாலினுக்கு தெரியவில்லையா என்றும், மாநிலக் கட்சியே இருக்கக்கூடாது என நினைத்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மாநில சுயாட்சி பற்றி பேசுவது சரியல்ல என்றும் தமிழிசை விமர்சித்தார். திமுக-கூட்டணி அடிமை கூட்டணி என்றும், திருமாவளவன் அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி