திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்: கி. வீரமணி

237பார்த்தது
திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்: கி. வீரமணி
தஞ்சாவூரில் நடைபெற்ற மகளிரணி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் என்பது சாதாரண வாக்குப்பதிவு அல்ல, அது சமூக மற்றும் பெண்ணுரிமைக்கான போராட்டம் என்று குறிப்பிட்டார். சுயமரியாதை திருமண உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் பிற மாநிலங்களில் கொண்டு வரப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்ணுரிமையைப் பாதுகாக்க திராவிட ஆட்சி தொடர வேண்டியது அவசியம் என்றார். திருமணத் தடைகளே ஆணவக் கொலைகளுக்குக் காரணமாகின்றன என்றும், இந்த நிலையை மாற்ற விழிப்புணர்வு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளும் உரிமைகளும் நிலைக்க வேண்டும் எனில், 2026-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி