மதுக்கூரில் விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை

68பார்த்தது
மதுக்கூரில் விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை
முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனம் கீழ வாடியக்காடு பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (வயது39) இவர் எலக்ட்ரீசியன். இவரது மனைவியும், மகனும் மதுக்கூர் அருகே உள்ள விக்ரமம் பகுதியில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று குணசீலன் தனது மனைவியையும், மகனையும் பார்க்க விக்ரமம் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த குணசீலன் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி குணசீலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மதுக்கூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி