அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா

2பார்த்தது
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, பெருமாள் கோவில் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இரண்டாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து பானை உடைத்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டு போட்டிகளுடன் விழாவை சிறப்பித்தனர். புதிய இடத்தில், புதிய வாழ்வியல் முறையில் அனைவரும் கூடி பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி