தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். ட்ரம்ஸ் இசை முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் திரண்ட திருவோணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.