தஞ்சை முன்னாள் எம். பி வீட்டில் கொள்ளை, 3 தனிப்படைகள் அமைப்பு

1பார்த்தது
தஞ்சை முன்னாள் எம். பி வீட்டில் கொள்ளை, 3 தனிப்படைகள் அமைப்பு
தஞ்சாவூரில் திமுக விவசாய அணியின் மாநிலச் செயலாளரும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 87 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி