பள்ளத்தூர் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

0பார்த்தது
பள்ளத்தூர் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் கலந்துகொண்டு 92 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார். திறனறித்தேர்வு மற்றும் கல்வியில் தனித்திறன் பெற்ற மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) காமாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியை சங்கீதா வரவேற்றார், ஆசிரியர் அமிர்தலிங்கம் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி