மதுக்கூர் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

2பார்த்தது
மதுக்கூர் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
மதுக்கூர் அருகே கிருஷ்ணாபுரம் சாய்பாபா கோயில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், ஆகஸ்ட் மாதம் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தார். புதிய வீட்டில் முன்பக்க அறையில் இருந்த பீரோவில் 6 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாயை பூட்டி வைத்து சாவியை அம்மாவிடம் கொடுத்திருந்தார். தற்போது வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து மதுக்கூர் போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.