பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கான புதிய கட்டிடம் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தரை தளத்தில் மகப்பேறு நோயாளிகள் பிரிவு, முதல் தளத்தில் பிரசவ அறைகள், தீவிர மற்றும் உயர் கண்காணிப்பு பிரிவு, இரண்டாவது தளத்தில் புதிதாக பிறந்த குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, மூன்றாவது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் கவனிப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து எம்எல்ஏ அண்ணாதுரை குத்துவிளக்கேற்றி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.