அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு

1பார்த்தது
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கென ரூபாய் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு பேசுகையில், நகராட்சி துறைக்கு தமிழக முதல்வர் ஒவ்வொரு ஆண்டும் 24 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி தந்துள்ளதாகவும், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், பேருந்து நிலையங்களை புதுப்பிப்பதற்கும், மார்க்கெட் வசதிகளை மேம்படுத்துவதற்கும், சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சீரமைப்பதற்கும், குடிநீர் வசதி ஏற்படுத்தவும் அந்த நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் அண்ணாதுரை, அசோக் குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.