தஞ்சை: லேத் பட்டறை உரிமையாளர் தற்கொலை.. வாலிபர் கைது

748பார்த்தது
தஞ்சை: லேத் பட்டறை உரிமையாளர் தற்கொலை.. வாலிபர் கைது
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே வாட்டாத்திக்கோட்டை கரம்பை மில் பகுதியைச் சேர்ந்த சரவணன் (37) என்பவர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ் (30) என்பவரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், சத்யராஜ் சரவணன் வீட்டிற்குச் சென்று அவருக்கும் அவரது மனைவிக்கும் ஆபாசமாகத் திட்டி மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சரவணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சத்யராஜை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி