திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்த 20 வயது கூலித் தொழிலாளி அர்ஜுன், பூமியில் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ஜுனின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அர்ஜுன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.