தஞ்சாவூர்: மதுக்கடையில் கண்காணிப்பாளர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

740பார்த்தது
தஞ்சாவூர்: மதுக்கடையில் கண்காணிப்பாளர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
தொண்டராம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மதுக்கடையில் ஞாயிற்றுக்கிழமை, கண்காணிப்பாளர் ராஜசேகரன் பணியில் இருந்தபோது, பாட்ஷா என்ற திவாகர் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கடனுக்கு மதுபாட்டில் கேட்டதாக கூறப்படுகிறது. தகராறில், இருவரும் ராஜசேகரன் மீது மதுபாட்டிலை வீசி தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் போலீசார் திவாகரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி