நடுவிக்கோட்டையில் தண்ணீரில் மூழ்கிய பயிர்கள், MLA ஆய்வு

1பார்த்தது
நடுவிக்கோட்டையில் தண்ணீரில் மூழ்கிய பயிர்கள், MLA ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சுமார் 100 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழைநீர் தேங்கி சேதமடைந்தன. இதுகுறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், மழைநீரை அகற்றவும், இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு வயல்வெளிகளை தூர்வாரவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.