அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மதியம் 2.30 மணியளவில் திடீரென வானில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. சுமார் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை விட்டுவிட்டு அந்த மர்ம சத்தம் இரண்டு முறை கேட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
அப்பகுதியில் வானத்தில் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தபோது அங்கே வெள்ளை நிறத்தில் ஒளிவட்டம் ஒன்று தென்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால், முழுமையான உருவம் சரிவர தெரியாத நிலையில் பொதுமக்கள் அது என்னவாக இருக்கும் என குழம்பினர். வானில் இருந்து வந்த திடீர் மர்ம சத்தம் பற்றிய செய்தியே அப்பகுதி முழுவதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.