தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்தை ஒரத்தநாடு போலீசார் தென்னமநாடு பைபாஸ் பகுதியில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஓட்டுநர் இளம்தமிழன் (35) மதுபோதையில் அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கியது உறுதியானது. பயணிகளைப் பத்திரமாக இறக்கிவிட்டு, ஓட்டுநரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.