பாப்பாநாடு: ரவுடி துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது

1023பார்த்தது
பாப்பாநாடு: ரவுடி துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே மதுக்கூர் பிரிவு சாலையில், பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய சோழகன்குடிக்காட்டைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்கிற பாட்டில்மணி (27) என்பவரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஏற்கனவே பல இடங்களில் மிரட்டல் விடுத்து வந்த இவரைப் பிடிக்க முயன்றபோது இந்தச் சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி