பட்டுக்கோட்டை: கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டப்படும் குப்பை

67பார்த்தது
பட்டுக்கோட்டை: கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டப்படும் குப்பை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அதிராம்பட்டினம் நகர் பகுதியில் இருந்து செயல்பாடு செதுபாவாசத்திரம் செல்லும் வழியில் மகிழங்கோட்டை பிரிவு சாலை அருகே அதிக அளவு குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதே போல் கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு பகுதிகளில் குப்பைக் கழிவுகள், மீன் கழிவுகள், கோழி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரங்களில் குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இந்த குப்பைகளை உட்கொள்ள ஆடு, மாடு, நாய்கள் மற்றும் பறவைகள் வந்து குப்பைகளை எடுத்துச் சென்று பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் போட்டு விட்டு செல்கிறது. 

இதனால் இந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்த குப்பைகளை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வந்து கொட்டிச் செல்கின்றனர். எனவே, இது குறித்து ஆய்வு செய்து சாலையோரங்களில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். குப்பைகளை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி