பட்டுக்கோட்டை: குளத்தில் மிதந்த ஆண் சடலம்

696பார்த்தது
பட்டுக்கோட்டை: குளத்தில் மிதந்த ஆண் சடலம்
பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை பகுதி விஏஒ சந்தோஷுக்கு குஞ்சன் குழி குளத்தில் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற விஏஒ, 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்ததைக் கண்டார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த நபர் யார் என்பது இதுவரை அடையாளம் தெரியவில்லை. பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணாமல் போன 50 வயது மதிக்கத்தக்க ஆண்கள் குறித்து தாலுகா போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி