தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை 650 கிலோ ரேஷன் அரிசியை சரக்கு ஆட்டோவில் கடத்திச் சென்ற பாலசுப்பிரமணியன் (48) என்பவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினா் கைது செய்தனா். திருவோணம், மேட்டுப்பட்டி, தோப்பு விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி இட்லி மாவு அரைத்து விற்பனை செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது.