தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டையில், மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடி ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்ட மாவீரன் தியாகி மலேயா கணபதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவரது நினைவிடத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தொழிலாளர் வர்க்கத்திற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த கணபதியின் போராட்ட வரலாற்றை நிர்வாகிகள் இந்நிகழ்வில் நினைவு கூர்ந்தனர்.