பட்டுக்கோட்டை: ரயில் நிலையம் எதிரே வேகத்தடை அமைக்க கோரிக்கை

65பார்த்தது
பட்டுக்கோட்டை: ரயில் நிலையம் எதிரே வேகத்தடை அமைக்க கோரிக்கை
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பயண சீட்டு முன்பதிவு செய்வதற்கும், ரயில்களில் செல்வதற்கும், ரயிலில் இருந்து இறங்கி பயணிகள் வெளியே வருவதும், வாகனங்கள் மூலமாகவும் நடந்தும் வருகின்றனர். ரயில் நிலையத்தின் முன் பகுதியில் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை மெயின் ரோட்டில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும் அந்த ரோட்டில் சென்டர் மீடியன் தடுப்பு கட்டை அமைக்கப்பட்டுள்ளது. 

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அந்த சாலை வழியாகத்தான் வாகனங்களும் வர வேண்டியுள்ளது. மேலும் ஒருவழி பாதையின் தொடக்கமும், இரண்டு அரசு போக்குவரத்து கழக டெப்போக்களுக்கு பேருந்துகள் செல்லக்கூடிய பாதையும் திருமண மண்டபம், தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரக்கூடிய ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில்தான் வரவேண்டும். ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதி இந்த சாலையில் உள்ளதால் வாகனங்களும் பொதுமக்களும் வரும்போது விபத்துகள் ஏற்படுகிறது. 

எனவே ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையில் வேகத்தடை அமைத்துத் தர வேண்டும் என்று ரயில் உபயோகிப்போர் நல சங்கத் தலைவர் விவேகானந்தம், செயலாளர் முகேஷ், பொருளாளர் வைத்தியநாதன் மற்றும் பொறுப்பாளர்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி