பட்டுக்கோட்டை: விடிய விடிய நடைபெற்ற தமுஎகச கலை இலக்கிய இரவு

77பார்த்தது
பட்டுக்கோட்டை: விடிய விடிய நடைபெற்ற தமுஎகச கலை இலக்கிய இரவு
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 96ஆவது பிறந்த நாள் விழா, 44ஆவது கலை இலக்கிய இரவு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திங்கள்கிழமை காலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் மக்கள் கவிஞர் சிலைக்கு என். சி. இரத்தினவேலு தலைமையில், தமுஎகச கிளை துணைத் தலைவர் க. கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்தார். 

மாலை 5 மணிக்கு பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து தமுஎகச மாவட்ட தலைவர் கவிஞர் சா. ஜீவபாரதி துவக்கி வைத்து, தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர் கோ. ஆறுமுகம் தலைமையில் கலை இலக்கியப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து சமூக நீதிப் போராளிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு கலை இலக்கிய இரவு, கிளைத் தலைவர் முருக. சரவணன் தலைமையில் துவங்கியது. கிளைச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை வரவேற்றார். தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா. விஜயகுமார் துவக்கி வைத்து பேசினார்.

 வரலாற்று ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன், கவிஞர் கே. ஜீவபாரதி, தமுஎகச துணைப் பொது செயலாளர் கவிஞர் களப்பிரன் ஆகியோர் உரையாற்றினர். நாகர்கோவில் முரசு கலைக்குழுவின் மக்கள் ஆட்டக் கலைகளும், மண் மணக்கும் மக்கள் பாடல்களை பாடினர். புதுகை பூபாளம் கலைக்குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி