விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யவும் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையை இருவழிச் சாலையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக, பரக்கலக்கோட்டை முதல் தம்பிக்கோட்டை வரையிலான 5.20 கி.மீ. சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்துள்ளன. சாலைப் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றைப் பாதுகாக்கக் கூண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.