உலகரத்ததான தினத்தை முன்னிட்டு தஞ்சை தபால்கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலர்களும் ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதன் மூலம் ரத்ததான நாள் உறுதிமொழி ஏற்றனர். அந்த வகையில் திருச்சி மத்திய மண்டல தபால் துறை தலைவர் அறிவுறுத்தலின் பேரில் தஞ்சை தபால் கோட்டம் சார்பில் ரத்ததான முகாம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.
இதனை தபால்துறை தஞ்சை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தங்கமணி தொடங்கிவைத்தார். இதில் தபால்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மேலும் ரத்ததானம் செய்த அலுவலர்களுக்கு மருத்துவக்கல்லூரி சார்பாக பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.