தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் துணைமின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம், கூட்டுக் குடிநீர் ஆகிய மின்பாதைகளுக்கு மின் வினியோகம் தடைபடும் என மின் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.