கண்களில் கருப்புத்துணி கட்டி பேராசிரியர்கள் போராட்டம்

16பார்த்தது
அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு, அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு இணையான உரிமைகளை வழங்கக் கோரி அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிமேம்பாடு, நிலுவைத் தொகை, ஊக்க ஊதியம், மற்றும் அரசாணை எண் 5-ன் படி கிடைக்க வேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாகும். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 10 பெண் பேராசிரியர்கள் உட்பட மொத்தம் 30 பேராசிரியர்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி கோஷங்களை எழுப்பினர்.