துப்புரவு பணியாளர்களுக்கு மழைக் கோட்டு வழங்கல்

1பார்த்தது
துப்புரவு பணியாளர்களுக்கு மழைக் கோட்டு வழங்கல்
பட்டுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் 300 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை விலையில்லா மழை அங்கிகள் பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கத்தால் வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை சுகாதார ஆய்வாளர் அறிவழகனின் கோரிக்கையின் பேரில், நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா மற்றும் ஆணையர் கணிராஜ் ஒப்புதலுடன் இந்த மழை அங்கிகள் வழங்கப்பட்டன. மனோரா ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், நடப்புத் தலைவர் கண்ணதாசன், செயலாளர் சசிதரன், பொருளாளர் கண்ணன், மருத்துவர் சதாசிவம், மருத்துவ அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி