மதுக்கூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
மதுக்கூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மதுக்கூர் அருகே புலவஞ்சி கிராமம் உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிக்கு அருகில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் உள்ளது. இந்தநிலையில் அதே பகுதியில் மற்றொரு தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தனியார் நிறுவன ஊழியர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தொடங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று புலவஞ்சி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

தொடர்புடைய செய்தி