பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில், திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திருச்சிக்கு செல்பவர்களுக்கு ரயில் மாறுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும், காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் மற்றும் சென்னைக்கு பகல் நேர இன்டெர்சிட்டி விரைவு ரயில் இயக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.