ஒரத்தநாடு அருகே கண்ணந்தன்குடி கீழையூர் கீழத்தெருவில் கே. கே. 2 வாய்க்கால் ஓரம் கடந்த 5 ஆண்டுகளாக 5 அடி ஆழமுள்ள பள்ளம் மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. இதனால், அப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் பெரும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக இந்தப் பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.