தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

0பார்த்தது
தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
தஞ்சை மாவட்ட கடல் பகுதியான தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரை இந்திய கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம், சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இணைந்து 'சாகர் கவாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி முருகன், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் படகு மூலம் கடலுக்குச் சென்று மீனவர்களிடம் அந்நியர் ஊடுருவல் மற்றும் சட்ட விரோத நபர்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மீனவர் கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவலை தடுக்கும் நோக்கில் இந்த பாதுகாப்பு ஒத்திகை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
Job Suitcase

Jobs near you