படிக்கட்டில் பயணம், ஆபத்தில் மாணவர்கள்

2பார்த்தது
படிக்கட்டில் பயணம், ஆபத்தில் மாணவர்கள்
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நாஞ்சிக்கோட்டை வழியாகச் செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருங்குளம், ஈச்சங்கோட்டை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இந்தப் பேருந்துகளையே நம்பியுள்ளனர். குறைந்தளவு பேருந்துகள் இயக்கப்படுவதால், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமாக பயணிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக பழைய பஸ் நிலையம் - நாஞ்சிக்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி