தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே இடையக்காடு பகுதியைச் சேர்ந்த ஷமீனா பர்வீன் (21) என்ற இளம்பெண், கடந்த ஆண்டு ரியாஸ் முகமது என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். கணவர் துபாய் சென்ற நிலையில், ஷமீனா தனது மாமியார் ரஹ்மத்து நிஷாவுடன் வசித்து வந்தார். கடந்த 6-ம் தேதி ஷமீனா பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. மகன் காதல் திருமணம் செய்ததில் அதிருப்தி மற்றும் வீட்டு வேலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், மாமியார் ரஹ்மத்து நிஷா தண்ணீர் பிளாஸ்க்கால் தாக்கியதில் ஷமீனா உயிரிழந்தார். கொலையை மறைக்க நாடகமாடிய மாமியாரை மதுக்கூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணமாகி ஓராண்டிற்குள் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.