தமிழக அரசு கல்வித்துறை சார்பில் மாநில அளவில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடந்தது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 750 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
அந்த வகையில் பட்டுக்கோட்டை அலிவலம் எஸ்இடி வித்யா தேவி மெட்ரிக். மேல்நிலை பள்ளி 11ம் வகுப்பு மாணவி பவித்ரா தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டு தேர்வு பெற்றுள்ளார்.
மாணவி பவித்ராவை எஸ்ஏடி பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தராசு, தாளாளர் சித்ரா கோவிந்தராசு, அறங்காவல் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் முனியக் கண்ணன், துணை முதல்வர் கதிரவன், மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.