இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விடுவிப்பு

2பார்த்தது
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விடுவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் படகு இயந்திர கோளாறால் இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 4ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து இந்திய கடல் எல்லையில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், மல்லிப்பட்டினம் பாயிஸ் அக்ரம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற முரளி (30), குமார் (32), ராஜா (53) ஆகியோரை நேற்று இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நேற்று மாலை பத்திரமாக மல்லிப்பட்டினம் வந்து சேர்ந்தனர். இலங்கை கடற்படையினால் விடுவிக்கப்பட்ட மீனவர்களை அவர்களது உறவினர்களும் சக மீனவர்களும் அன்புடன் வரவேற்றனர். மீனவர் வாரியத்தைச் சேர்ந்த மல்லிப்பட்டினம் தாஜுதீன், தமிழக மீனவர்களை விடுவித்த இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி