தஞ்சாவூர்: மின் அழுத்தத்தால் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது

83பார்த்தது
தஞ்சாவூர்: மின் அழுத்தத்தால் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது
தஞ்சாவூர் பள்ளியக்கிராமத்தில் திடீரென ஏற்பட்ட மின் அழுத்தத்தால் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 

தஞ்சாவூர் பள்ளியக்கிராமத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடைவீதியில் உள்ள ட்ரான்ஸ்பார்மரை சற்று தள்ளி மாற்று இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த ட்ரான்ஸ்பார்மரை மாற்றும் பணி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பணிகள் முடிவடைந்ததும் மின்சார விநியோகத்தை வழங்கும் போது திடீரென உயர் அழுத்த மின்சாரம் வீடுகளுக்கும், அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. 

இதனால் உயர் அழுத்த மின்சாரம் தாங்காமல் பல வீடுகளில் டிவி, மிக்ஸி, ப்ரிட்ஜ், டியூப் லைட்டுகள், லேப்டாப் ஆகியவை சேதமடைந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பின்னர் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி