தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பாரி காலனியைச் சேர்ந்த இந்து (28) என்பவர், திருமணமான 8 மாதங்களிலேயே நகை அடகு வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்து வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி சில மாதங்களே ஆனதால் உதவி கலெக்டரும் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.