தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வெளிவயல் ஓம்கார் சுற்றுச்சூழல் மையத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அலையாத்தி காடுகள் பாதுகாப்பு குறித்த 2 நாள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு வனத்துறை, கல்வித்துறை மற்றும் ஓம்கார் அறக்கட்டளை இணைந்து நடத்திய இம்முகாமில் மதுக்கூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200 மாணவர்கள் பங்கேற்றனர். அலையாத்தி நாற்றங்கால் பராமரிப்பு, வளர்ப்பு முறைகள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சி கருவிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. கடற்கரை அருகிலுள்ள அலையாத்தி காடுகளுக்கு மாணவர்கள் களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது.