நல்லகண்ணு மறைவிற்கு அஞ்சலி ஊர்வலம்

3பார்த்தது
நல்லகண்ணு மறைவிற்கு அஞ்சலி ஊர்வலம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற உணர்வுப்பூர்வமான ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திராவிடர் கழகம், அமமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி