பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்த உதயநிதி

518பார்த்தது
பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்த உதயநிதி
பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், ஆறரை ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் நேற்று திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், பட்டுக்கோட்டை மக்களின் கனவுத் திட்டங்களான 100 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் உள்ளிட்ட மொத்தம் 480 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்படும் என்றார்.