தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (மார்ச் 4) தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளை தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான திடலில் சந்திக்கிறார். இதற்கான பணிகள் இன்று (மார்ச் 3) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பனையூரில் இருந்து விஜய் பிரச்சார வாகனம் தஞ்சாவூரை நோக்கி இன்று புறப்பட்டுச் சென்றது.