திருச்சி-தாம்பரம் இண்டர்சிட்டி ரயிலுக்கு வரவேற்பு

1பார்த்தது
திருச்சி-தாம்பரம் இண்டர்சிட்டி ரயிலுக்கு வரவேற்பு
பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, திருச்சி - தாம்பரம் இன்டர்சிட்டி ரயில் (வண்டி எண்: 16808/16807) இன்று (மார்ச் 1) முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்படுகிறது. இது தஞ்சாவூர், கும்பகோணம் வழியாகச் செல்லும். காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கச் செயலாளர் வக்கீல் ஜீவகுமார் கூறுகையில், "இந்த ரயில் நிரந்தரமாக்கப்பட்டதால் பயணக் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. மேலும், நவீன எல். எச். பி (LHB) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது" எனத் தெரிவித்தார். மேலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வழியாகப் பகல் நேரத்தில் சென்னைக்கு ஒரு புதிய சூப்பர் பாஸ்ட் ரெயில் இயக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you