தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே சிரமேல்குடியை சேர்ந்த சூர்யா (28), கணவர் அருண்பாண்டியனின் தினசரி குடிப்பழக்கம் மற்றும் தகராறால் மனமுடைந்து தாய் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது ஏற்பட்ட தகராறால் தாய் வீட்டிற்கு வந்த சூர்யாவை சமாதானப்படுத்தியபோதும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.