பட்டுக்கோட்டையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

56பார்த்தது
பட்டுக்கோட்டையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பட்டுக்கோட்டை கண்டியன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. ஓட்டல் தொழிலாளியான இவருக்கும் திருவாரூர் மாவட்டம் இடும்பாவனத்தை சேர்ந்த செந்தில் மகள் ஜீவாவுக்கும் (வயது 21) திருமணம் ஆகி 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

பாலாஜிக்கும் அவருடைய மனைவி ஜீவாவுக்கும் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஜீவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஜீவாவின் தந்தை செந்தில், தனது மகள் ஜீவாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஜீவாவின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி