அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை மாரிக்கண்ணுவின் இல்ல விழாவுக்கு வந்த உறவினர்களிடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. மதுரையிலிருந்து வந்த முருகேசன், சின்னராஜ், சதீஷ்குமார் மற்றும் திருவாரூர் மாவட்டம் இடையூர் சங்கேந்தியைச் சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, மாரிக்கண்ணு 'என் வீட்டு விழாவுக்கு வந்தவர்கள் மீது எப்படி புகார் அளிக்கலாம்' எனக் கேட்டதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மாரிக்கண்ணு காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 7 பேரை கைது செய்துள்ளனர்.