தஞ்சை மாவட்டம், பேராவூரணி சேது சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அடிக்கடி அங்கு காணப்படுவதாலும், அருகிலேயே குழந்தைகள் விளையாடும் இடம் இருப்பதாலும், அசம்பாவிதம் நிகழும் முன் கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.