அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (தஞ்சை தெற்கு மாவட்டம்) கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில்,
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மாணவர்களின் உழைப்பைச் சீரழித்துள்ளதாகவும், மறு தேர்வு அறிவிப்பு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் ஜமாஅத் குற்றம் சாட்டியுள்ளது. ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும்
நீட் தேர்வுக்கு நிரந்தரத் தீர்வாக அதை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.