தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை, 11/02/2026) பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு கண்டனம் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பேராவூரணி அதிமுக தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் கோவி. இளங்கோ தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, போராடும் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.